அந்த கரணசுத்தி
அந்த கரணசுத்தி என்றால் உள்ளிருக்கும் கருவி. நம்முள் இருக்கும் கருவி கரணங்கள் , மனதின் நான்கு செயல்பாடுகளான மனசு, சித்தம், அகங்காரம் மற்றும் புத்தி ஆகியவற்றை ஒத்தே செயல்படுகிறது. உள்கருவி 10 புலன்களை கொண்டுள்ளது அவை : கேட்டல் ,உணர்தல், பார்த்தல், சுவைத்தல், வாசனை ,பேசுதல், கிரகித்தல் ,நகருதல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் நீக்குதல் உறுப்புகள் மற்றும் ஐந்து வாயுக்கள் . இவ்வாறான முறையில் சுத்தி செய்வதையே நாம் அந்த கரண சுத்தி அல்லது அகக்கருவி சுத்தி என்று கூறுகிறோம் .இவை சுத்தி செய்வதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் பல. மனதின் நான்கு செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல், ஒன்றாக ஆக்குதல், தனித்தனியாக இருந்ததை ஒன்றாக செயல்படுத்து ஒருங்கிணைத்தல், ஒழுங்குபடுத்துதல் என்று பொருள் .இதன் மூலம் சுய விழிப்புணர்வு ஏற்பட்டு உங்களுக்குத் தேவையான அனைத்து இக, பர விஷயங்களில் உங்களை இழுத்துச் செல்ல இது உதவும். நீங்களே ஒரு செல்ஃப் மாஸ்டராக ஆகலாம்.அந்த கரண சுத்தி வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வாறுஉடல் சுத்தி, ஆன்ம சுத்தி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைவிட மிக மிக முக்கியம், அந்தகரணசுக்தி. இந்த அந்தகரண சுக்தி பயிற்சியை நீங்கள்மேற்கொண்டீர்களானால், ஒவ்வொருவரும் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நல்ல யோக நிலையை அடைவீர்கள் என்பது நிச்சயம், சத்தியம், உண்மை .இந்த அந்தகரண சுத்தி ஒழுங்காக நீங்கள் செய்து வந்து கொண்டிருந்தீர்களானால் ,நீங்களும் புத்தன் ஆகலாம். இனி அந்தகரணசுத்தியை பற்றி பார்ப்போம். அங்க கரணம் என்ற இந்த வார்த்தை, அதன் பொருள் உள் கருவி. அதாவது நமக்கு சூட்சம முறையில் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் மனதை ஆட்டுவிக்கும் உள் கருவி என்று சொல்லலாம். வெளிக்கருவி ,உள் கருவி என்று இரண்டு உள்ளது. இது உள்கருவி .வெளிப்புற கருவி என்பது யாது? அவை தான் நமக்கு எல்லாருக்கும் தெரியும். இரண்டு கண்கள், காது, மூக்கு ,வாய் ,இரண்டு கைகள், இரண்டு கால்கள் ,மல வாய், குதம் ,குய்யம் அதெல்லாம், வெளிப்புற கருவிகள் என்று அழைக்கப்படுகிறது. உட்புற கருவி என்பது அகங்காரம் ,புத்தி, சித்தம், மனம் ஆகிய நான்கு பகுதிகளை கொண்டது தான் அந்தகரணம்.
Yoga Types and Practices
Sightseeing Tours of the Indian Temples
We Organize the Coolest Tours
01. Breathtaking Views
02. Spiritual Tours
Our Guests Say
Thanks for a wonderful tour! I have long dreamed of visiting the Hindu monasteries of India.
Emma Lee
It was the best tour ever! I got a lot of impressions of beautiful places and breathtaking views.
Liam Gordon
It is the perfect tour! I also visited the most beautiful temples and monasteries in India.
Noah Moore
Went on this tour with the whole family. Super! Everyone liked the ancient temples!