முழு பிரபஞ்சமும் அணுக்களால் ஆனது என்றும் கண்டறிந்தனர். பிரபஞ்சம் ஒரு அணு என்றும் கூட கண்டுபிடித்தார்கள். இந்த பூமியில் உள்ள அனைத்தும் பிரபஞ்ச சக்தியால் மட்டுமே படைக்கப்பட்டவை. அவர்கள் அதன் ஒவ்வொரு படைப்பையும் வணங்கி, அத்தகைய ஆற்றலைத் தங்கள் மனதில் சேமித்தனர். பெரிய முனிவர்களும் இப்பூமியில் நம்மைப் போலவே மனிதர்களாக வாழ்ந்தார்கள். இருப்பினும் அத்தைகைய உயரிய நிலையை அவர்கள் தங்கள் சுற்றுப்புற சூழ்நிலைகளை சமன் செய்வதனால் மட்டுமே அடைந்தனர். வேறு எந்த உச்ச சக்தியும் அவர்களுக்கு அவ்வித சக்தியை வழங்கவில்லை. அவர்கள் பிரபஞ்ச சக்தியை முழுமையாக ஈர்க்கும் வல்லமைக்கு தங்களை தகுதிப்படுத்தியதன் வாயிலாக, புற சூழ்நிலையால் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடிந்தது.
மனிதர்களாகிய நாம், நம் வாழும் வாழ்க்கையில் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் சில இருக்கின்றது.அவை , நாம் எங்கிருந்து வருகிறோம்? நாம் யார் ? இறுதியில் நாம் எங்கு செல்வோம்? போன்றவை ஆகும். இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டறிவதே நம் வாழ்வின் உண்மையான நோக்கம் ஆகும்.
நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு செல்வோம் ? என்ற பல கேள்விக்கான உண்மை பதில்களை சித்தர்கள் வெளிக்கொணர்கின்றனர்.
பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்று கண்டறிந்தனர். பிரபஞ்சம் ஒரு அணு என்றும் கூட கண்டுபிடித்தார்கள். இந்த பூமியில் உள்ள அனைத்தும் பிரபஞ்ச சக்தியால் மட்டுமே படைக்கப்பட்டவை. அவர்கள் அதன் ஒவ்வொரு படைப்பையும் வணங்கி, அத்தகைய ஆற்றலைத் தங்கள் மனதில் சேமித்தனர். பெரிய முனிவர்களும் இப்பூமியில் நம்மைப் போலவே மனிதர்களாக வாழ்ந்தவர்கள் . இருப்பினும் அத்தைகைய உயரிய நிலையை அவர்கள் தங்கள் சுற்றுப்புற சூழ்நிலைகளை சமன் செய்வதனால் மட்டுமே அடைந்தனர். வேறு எந்த உச்ச சக்தியும் அவர்களுக்கு அவ்வித சக்தியை வழங்கவில்லை. அவர்கள் பிரபஞ்ச சக்தியை முழுமையாக ஈர்க்கும் வல்லமைக்கு தங்களை தகுதிப்படுத்தியதன் வாயிலாக, புற சூழ்நிலையால் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடிந்தது. மனிதர்களாகிய நாம், நம் வாழும் வாழ்க்கையில் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் சில இருக்கின்றது.அவை , நாம் எங்கிருந்து வந்தோம் ? நாம் யார் ? இறுதியில் நாம் எங்கு செல்வோம்? போன்றவை ஆகும். இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டறிவதே நம் வாழ்வின் உண்மையான நோக்கம் ஆகும். நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு செல்வோம் ? என்ற பல கேள்விக்கான உண்மை பதில்களை சித்தர்கள் வெளிக்கொணர்கின்றனர். கடவுள் தான் நம்மைப் படைத்தார், அதற்கு முன் நாம் இல்லை. உடல் நமக்குச் சொந்தமானது அல்ல. நம் ஆன்மா மட்டுமே நமக்கு சொந்தமானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உடலுக்காக வாழாமல் ஆன்மாவுக்காக வாழ வேண்டும். ஏனெனில் ஆன்மா நம் உடலை விட்டு வெளியேறியவுடன் உடல் மறைந்துவிடும். நமது ஆன்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது. நமது ஆன்மா நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் சூரியனின் மின்காந்த சக்தியின் அண்ட சக்திகளால் உருவாக்கப்பட்டது. ஆக, ஆன்மாவை அழிக்கக்கூடிய உயர்ந்த சக்தி வேறு எதுவும் இல்லை. மனிதர்களாகிய நாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் படைக்கப்பட்டோம்.இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இயற்கைக்கு அடுத்தபடியாக பொருட்களை உருவாக்கக்கூடிய முதல் வடிவம் மனிதனே. அதனால்தான் நம் முன்னோர்கள் மனித வடிவ உருவத்தை கடவுள் என்று சொன்னார்கள். கடவுள் தனது விரல் ரேகைகளை மனிதர்கள் மீது பதித்துள்ளார்.ஆகையால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளே. அனைத்து படைப்புகளை காட்டிலும், மனிதன் என்ற படைப்பினால் மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு என்ற உயரிய நிலையை அடைய முடியும் மற்றும் பிரபஞ்சத்தில் ஆத்மாவுடன் என்றென்றும் வாழ முடியும். மற்ற படைப்புகளினால் பிரபஞ்சத்தின் காஸ்மோஸ் சக்தியை முழுமையாக ஈர்த்து தன்னை தானே அறிய ஏதுவாக இராது. இவற்றையெல்லாம் உணர்ந்து நாம் ஏன் நம் உடலுக்காக வாழ வேண்டும்? நாம் நம் ஆன்மாவுக்காக வாழ வேண்டும் மற்றும் தெய்வீக உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும். நம் முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் எப்படி வாழ்ந்தார்களோ அப்படித்தான் நாம் இயற்கையின் வழியில் வாழ வேண்டும் . நாம் ஏன் படைக்கபட்டோம் ? படைக்க பட்டதன் காரணம் என்ன ? போன்ற அனைத்து புரியா புதிர்க்கும் விடயமாக ஆவினன் சித்தர் பீடம் திகழ்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உண்மையான காரணத்தை கண்டறிய ஆவினன் சித்தர் பீடம் நமக்கு வழிகாட்டியாக திகழ இருக்கிறது.