Skip to content Skip to footer
ஆவினன் பற்றி அறிக

வழிகாட்டலும், அறிவுறை பகிர்தலும்

இன்றைய சமுதாயம் நவீன நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய சூழல் போட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான நிலையில் இருக்கிறது .பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிதானம் இல்லாத போக்கு நிலவுகிறது. மனிதன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சர்வைவல் பண்ணுவதற்கு பிறரை அழிக்கவும் துணிகின்றான். இத்தகைய விலங்கியல் மனநிலையில் இருந்து மனிதனை மீட்கவும், நெறிப்படுத்தவும் தோன்றியதே வழிகாட்டலும், அறிவுரை பகிர்தலும் ஆகும். அதாவது கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் என்ற துறை ஆகும். இத்துறை மனிதனின் தேவையும் இயலாமையையும் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றித் தரும் வழிமுறைகளை ஆராய்ந்து கூறும் துறையாக உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குகிறது. தமிழ் சமூகச் சூழலில் வழிகாட்டலும் அறிவுரை பகிர்தலும் இருப்பினும் இது பற்றிய கொள்கைகள், கருத்துக்கள் இல்லாதது போலவும் ,புதிது போலவும் நிலவுகிறது. இதை நினைத்தால் மனம் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறது .ஆனால் வழிகாட்டலும் அறிவுரை பகிரதலும் சங்க கால ஆற்றுப்படை நூல்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை பண்பாட்டு நிகழ்வாக ஓர் அறச்செயலாக இருந்தமை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டல் மற்றும் அறிவுரை பகிர்தல் குறித்த செய்தியை இங்கே சிறிது பார்ப்போம்.வழிகாட்டலும், அறிவுரை பகிர்தலும் பற்றி கூறுவோர் குறிப்பாக கல்வி மற்றும் உளவியல் சார்ந்த தளத்தில் ஆர்தர் ஜே.ஜோன்ஸ், ப்ரோ மற்றும் குரோ ருத்ரான் மற்றும் ஜார்ஜ் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துரைத்து அவற்றிலிருந்து இத்துறை சார்ந்த பணிகளை தொடங்கினர் .ஆனால் தமிழ் இலக்கியங்களை காலம் தோறும் இத்தகைய பணியினை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் சித்தர் பாடல்களில் இடம் பெறும் வழிகாட்டல் அறிவுறை புகழ் குறித்து சிந்தனையை விளக்குவதை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

வழிகாட்டல்

வழிகாட்டுதல் என்பது ஒரு தனிநபர் தனது திறமைகளையும் தேவைகளையும் நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவது ஆகும்.வழிகாட்டுதல் என்பது தனி நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது அல்ல .மாறாக தானே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள உதவிடுதல் ஆகும். அதாவது அவரவர்கள் பிரச்சனையை தானே தீர்த்துக் கொள்ள உதவுதல் என்று பொருள். வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் க்ரோ மற்றும் க்ரோ A அவர்களின் கருத்துப்படி எல்லா வழிகாட்டலின் அடிப்படை கருத்தும் திறன் மிக்கவர், பிறருக்கு வழிகாட்டி அவரை தன் வாழ்வு வளம் பெற தக்க வாழ்க்கை கண்ணோட்டத்தை தானே உருவாக்கிக் கொள்ள செய்து, அதற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்து செயல்படுத்தவும் உதவிடுதல் என்கிறார். தமிழ் இலக்கியங்களில் வழிகாட்டுதல் என்பது ஆற்றுப்படுத்துதல் என்று சொல்லி வழங்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம், "கூத்தரும் பாணரும் பொருணறும் விரலியும் ஆற்றிடை காட்சி உரல தோன்றி பெற்ற பெருவளம் பேரார்க்கு அறிவுரைச் சென்று பயன் எதிர் சொன்ன பக்கமும் " தொல்பொருள் நூறும் 36 ,என தொல்காப்பிய நூல்பாலின் வழி அறிவில் சிறந்த சான்றோர்கள் தான் பெற்ற இன்பத்தை பெறாதவர்களுக்கு பெற்று பயனடையும்படி கூறி வழிகாட்டி உள்ளனர். எனவே வழிகாட்டுதல் என்பது அறிவில் சிறந்த அல்லது அனுபவம் மிக்கவரால் சொல்லப்படுவது ஆகும்
ஆவினன் பற்றி அறிக

அறிவுரை பகிர்தல்

மனிதன் ஒரு சோதனைக்கு உள்ளாகும் போது சரியான முடிவு எடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக கூடிய தருணத்திலும் வீட்டில் உள்ள அனுபவமிக்க பெரியோர்கள் மற்றும் படித்த அறிவாற்றல் கொண்டவர்களின் ஆலோசனையை நாடுகிறான். மனக்குழப்பத்தில் உடலும் பொழுது நமக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதும் மனச்சுமையை குறைத்து ஆற்றுப்படுத்தி கொள்வதும் இயல்பான ஒன்றாகும். அதாவது காரல் ரோஜஸின் ரோஜஸ் கார்ட் ஆர்ட் கருத்துப்படி, அறிவுரை பகிர்தல் என்பது தொடர்ச்சியான நேர் முக தொடர்புகள் மூலம், ஒருவரது மனப்பான்மையையும் , நடத்தையையும் மாற்றி அமைத்தல் ஆகும்.வழிகாட்டலும், அறிவுரை பகர்தலும் முறையை தனித்தனியே வரையறைகளை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து அறிய முடியாத தொடர்பை கொண்டது ஆகும். ஒன்றின் துணை இல்லாமல் இன்னொன்று இங்கே இல்லை .ஒன்றின் துணை இன்றி மற்றொன்று தனித்து இயங்காது எனினும், வழிகாட்டலின் போது கையாளப்படும் யுக்தி முறைகள் ஒன்றாகவே பின்பற்றப்படுகிறது. சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் பயன்படும் விதத்தில் வழிகாட்டல், அறிவுரை பகர்தல் பல வகைப்படுத்தப்படுகிறது .தனிமனிதனுக்காக தனி நபர் வழிகாட்டல், உடல்நிலை சார்ந்த வழிகாட்டல் ,ஆளுமை வளர வழிகாட்டல், பாலுணர்வு சார்ந்த வழிகாட்டல், மணவாழ்க்கை குறித்த வழிகாட்டல், குடும்பம் சார்ந்த வழிகாட்டல், முதியவருக்கு வழிகாட்டல் ,தலைமை பண்புக்கான வழிகாட்டல் ,தொழில் முறைக்கான வழிகாட்டல் ,ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்த வழிகாட்டல் என பல நிலைகளில் இதன் தேவையை உணர முடிகிறது.

Sightseeing Tours of the Indian Temples

Spiritual Journey

We Organize the Coolest Tours

We appreciate your trust greatly! Our clients choose us and our products because they know we’re the best.
01. Breathtaking Views
02. Spiritual Tours
REVIEWS FROM YOU

Our Guests Say

Thanks for a wonderful tour! I have long dreamed of visiting the Hindu monasteries of India.

Emma Lee

Emma Lee

Redding, CA

It was the best tour ever! I got a lot of impressions of beautiful places and breathtaking views.

Liam Gordon

Liam Gordon

Austin, TX

It is the perfect tour! I also visited the most beautiful temples and monasteries in India.

Noah Moore

Noah Moore

Chicago, IL

Went on this tour with the whole family. Super! Everyone liked the ancient temples!

David Bowman

David Bowman

New York, NY
ta_INTamil