Skip to content Skip to footer
ஆவினன் பற்றி அறிக

மனிதனின் மன சக்தி

மனிதனுடைய மூளை திறனை எவ்வாறு பரிணாம வளர்ச்சியைக் கொண்டு எப்படி டைம் ட்ராவல் பண்ண முடியும் என்று சித்தர்கள் பல வருடம் முன் செய்து வந்துள்ளனர். உதாரணத்திற்கு

  • "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
  • பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
  • கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
  • வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
  • செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
  • எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
  • மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்."

பரிணாம வளர்ச்சியின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்து அதனை பகுப்பாய்வு செய்து தங்களை தாங்களே தன்னாய்வு சோதனை செய்து( self assessment) பல வருட காலம் காடு, மலை மேடுகளில் அலைந்து திரிந்து தங்களை தாங்களே அறிவியல் சோதனை கூடமாக மாற்றி தன்னாய்வு சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டார்கள்.
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே".
ஆண்டாண்டு காலம் ஆனாலும் அறிய முடியாத அதி உத்தமமான மாபெரும் சக்தி நிலையை உன்னதமான மனிதன் அடைந்து சித்தன் ஆனான். இதை நாம் வழிமொழிந்து பின்பற்றி நடப்போமேயானால் சரணடைதலே ஒன்றே தீர்வு.

ta_INTamil