சித்தர் அருள்
சித்தர் நெறிக்கி முழுமையான ஆதாரமும், பாட வகுப்பும், செயல் திட்டமும் எல்லா திருமூலர் அருளிய திருமந்திரம் என்று தான் கூற வேண்டும். சித்தர் அம்சத்தின் நான்கு அம்சங்களான வைத்தியம் ,வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு துறைகளைப் பற்றி திருமூலர் பாடி அருளி உள்ளார். ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே அதன் ஆயுள் அமைப்பு, அது அடையப் போகும் வாழ்வின் தன்மை யாவும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது .அறம் உணர்ந்து ஆற்றல் மிக்க நெறியும், நேர்மையும் கொண்டு ஒழுக்கமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும் அறிவுச்சுடர் நம் தமிழ் மண்ணில் மட்டும் தான் தூண்டாத விளக்காக இன்றும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது தூண்டா விளக்காக இருக்கிறது என்று நான் சொல்கின்றேன். இந்த விளக்கு மேலும் மேலும் கண்டிப்பாக பிரகாசம் அடையும் சூரிய ஒளியின் வழிகாட்டுதலில் நடை போடும் .அப்போது, நமக்குப் பிறர் புர தேசத்திலிருந்து கொண்டு வரப்படும் கைவிளக்கு நமக்குத் தேவையா ?சிந்தியுங்கள் மனிதர்களே .அதேபோல் லட்சம் மடங்கு பிரகாசம் என்னும் ஞானம் இங்கேயே நம்மிடமே உள்ளது. இதை அறியாமல் விளக்கு ஒளியை பெரிதாக எண்ணி அப்படி செல்லும் விட்டில் பூச்சி போல் ஆசையால் உந்தப்பட்டு விளக்கின் வெப்பத்தில் மடியும் அல்லது மடியப்போகும் இந்த ஞான சூனியங்களை என்ன என்பது மனித வாழ்க்கைக்கு தேவையான உண்மையான இறை விளக்கின் மொழி பற்றி தத்துவங்களை சித்தர் பெருமக்கள் பலவாறு கூறியுள்ளார்களே. அதை கேட்டு பயன்பெற்று தான் பாருங்களேன். அனைத்து சித்தர்களையும் குருவாகவும், தாயாகவும் நீங்கள் கருதினீர்களே ஆனால், உடனே உங்கள் முன் சித்தர்கள் தோன்றி உங்களுக்கு அருள் புரிவது சத்தியமே.