சித்தர்கள் தந்த அறிவியல் நன்கொடை
சித்தர் உலகம்
அறிவியல் தமிழ் கொடுத்த அருட்கொடை தான், தமிழ் மருத்துவம். எதுகை, மோனையுடன், இலக்கணம் கருதி தவறாமல் சித்தர்கள் மீட்டிய நாதம்தான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவ களஞ்சியம். சித்தர்கள் தொடாத எல்லைகளே இல்லை. விண்ணறிவியல் ,அணு அறிவியல் ,மருத்துவ அறிவியல், ஐந்திணை அறிவியல், கால ஒழுக்கம் , சமய அறிவியல் என பல்துறை அறிவியலாய்வுகளில் முத்துக்குளித்து பல்வேறு விஞ்ஞானம் முத்துக்களை ஓலைச்சுவடிகளாக கல்வெட்டு, எழுத்துக்களாக , ஏட்டு பிரதிகளாக இந்த தமிழ் உலகிற்கு அருட்கொடையாக தந்துள்ளனர். நீண்ட காலம் ஆய்வு செய்து நாம் தற்போது கண்டறிந்த அறிவியல் கருத்துக்களை எல்லாம் சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் உணர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருப்பது ஒரு அறிவியல் அதிசயமாகும்.