"தெரிந்து கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள்"
சித்தர் வாக்கு
இது சித்தனின் வாக்கு. எல்லாவற்றிற்கும் அதாவது இவ்வுலகில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. அதை புரிந்து கொள்ளும் சக்தி உனக்கு ஏதப்பா? பாவத்தை செய்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவர்களுக்கு இறைவன் எந்த சமயத்தில் ,எப்படி தண்டனை தருவான் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன்கூட்டியே அறிவார்கள் .ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் ,நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைக்கின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக் கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும் .சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் என்று நமக்கு புலப்படும்.