சித்தர்கள் உளவியல்
குடும்பம், சமூகமாகியவற்றை வெறுத்து ஒதுக்கி தங்களுடைய ஆழ்மனதில் நல்ல நிலைக்கு வர வேண்டும் ,இறைவனை அடைந்தே தீர வேண்டும் என்ற சமூக விழி என்னத்தால் சித்தர்கள் புறநிலைக்கு தீர்வாக சாவை நாடவில்லை. மனிதன் நடமாட்டம் இல்லாத காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தனர் .அத்துடன் தங்கள் உயிருக்கும் உடலுக்கும் ஏற்பட்ட தீங்குகளிலிருந்து காத்துக் கொள்ள பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து அவற்றை பயன்படுத்திக் கொண்டனர். தாங்கள் பயன்படுத்திக் கொண்டதோடு இல்லாது, தங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூக எல்லைகளிலிருந்து வாழும் பிற மனிதர்களும் பயனுறும் வண்ணம் மருத்துவ குறிப்புகளையும் சுவடிகளில் எழுதி வைத்தனர். நீர்மேற்குமிழி காயம் என்று உரைத்த மனித உடலின் நிலையாமையை பாடிய சித்தர்கள் தான் உடலை பேணுவதற்கான மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர். சித்தர்களின் இந்த மருத்துவராய்ச்சிகளுக்கும் ,செயல்பாடுகளும் தான் சித்த மருத்துவமாக பரிணமித்தது .சித்த மருத்துவத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது. சித்தர்களின் ஆழ்மனதில் அடங்கிக் கிடந்த வாழ்வுணர்ச்சி தான் எனலாம். தங்களுடைய உடலையும் உயிரையும் பேணி தொடர்ந்து வாழ வேண்டும் என்கிற உணர்ச்சி தான் அவர்களை, மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் தேடச் செய்தது .இந்த தேடலும் ஆராய்ச்சியும் தங்களுடைய பயன்பாட்டுடன் நின்று விடாது சமூக பயன்பாட்டுக்கு உதவியாய் அமைய வேண்டும், என்கிற அவர்களின் இடைமனம் மற்றும் புறமன விளைவே அவர்களது மருந்து குறிப்புக்களை பதிவு செய்ய வைத்தது. சித்தர்களுடைய ஆழ் மனதில் அழிந்து போய் விடாத வாழ்வுணர்ச்சியே சித்த மருத்துவத்தின் உயரிய மருத்துவ முறையை உலகிற்கு அளித்தது. மனித உடல் நிலை இல்லாதது. அழியக்கூடியது என்பதை தம் சிந்தனை வெளிப்பாடுகளில் சித்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினாலும், மனித உடலின் ஆற்றலையும், உள்ளத்தின் ஆற்றலையும் அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருந்தனர் ."உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே". என்னும் திருமூலரின் வரிகள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன. உடல் குறித்த சிந்தனைகளில் சிதர்களிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.