திரிகரண சுத்தி
பழையன கழிதலும் புதியன புகுதலும் பிரபஞ்சத்தில் மாறாது என்றும் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல். நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களை அப்படித்தான் உடம்பில் சக்திகளை உருவாக்கும் சகலமும் ஒரு கட்டத்தில் கழிவாக வெளியேற்றத் தான் செய்ய வேண்டும். இதை நீங்கள் வெளியேற்றிய ஆக வேண்டும். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும், மனக்கழிவுகளையும், ஆன்ம கழிவுகளையும் அகற்றுவதே உதிரும் ரோமம் கொட்டும் பழைய தோல் செல்கள், வியர்வை ,எச்சில் சிறுநீர் உள்ளிட்ட பழைய கழிவுகள் நாள்தோறும் நம்மை விட்டு வெளியேறுகின்றன. அவை நல்ல முறையில் வெளியேறுகின்றனவா? வெளியேறுவதில் ஏதும் சிரமம் உள்ளதா? என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. பல் தேய்ப்பதும், குளிப்பது மட்டுமே உடலுக்கான சுத்தி என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் எப்படி பல்லை சுத்தம் செய்வது என்பதை கூட பலரும் தெரியாது இன்றும் பல் தேய்க்கிறார்கள். சரி, விஷயத்திற்கு வருவோம் .கண்ணை, வாயை ,உடலை ஏன் ஆத்ம சுத்தி அனுபவ சுத்தி சுத்தி என ஆன்மாவுக்கான சுத்தி முறைகளை அளித்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் நமக்கு அளித்திருக்கும் நல்ல உணவு முறை பழக்கங்கள் ,மூச்சு விடும் முறைகள், கழிவுகளை வெளியேற்றும் முறைகள் மற்றும் பல்வேறு சுத்தி முறைகளை பற்றி அறிந்து கொண்டால் நமக்கு ஆரோக்கியம் நிச்சயம் .வயது 120. இன்று உலகமே போராடிக் கொண்டிருக்கும் சர்க்கரை மற்றும் பீபி நோயிலிருந்து விடுதலைப் பெற்று மனிதன் ஆரோக்கியமாக வாழ ஏதுவாக இருக்கும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை இழந்து இன்று மனிதன் தவிக்கின்றான் அல்லவா ?அந்த விஷயத்திற்கு தீர்வு காணலாம்.